;
Athirady Tamil News

கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை: சித்தார்த்தன்..!!

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக தமிழரசு கட்சி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான புளொட் அமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்ட தர்சனை எதிர்த்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரகாஷ் போட்டியிட்டமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“உள்ளூராட்சி சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நியமிக்கப்படுகின்ற உறுப்பினரை எதிர்த்தோ அல்லது வேறு ஒரு உறுப்பினரை ஆதரித்தோ எவரும் செயற்படக் கூடாதென கூட்டமைப்பில் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தோம்.

இதனை பல தடவைகள் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தும் அந்தத் தீர்மானத்தை மீறுகின்ற வகையில் பிரகாசும் அவருடன் சேர்ந்த உறுப்பினர்களும் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் செயற்பட்டிருக்கின்றனர்.

இது உடுவில் என்ற விடயத்திற்கு மட்டுமல்ல. ஏனைய எல்லா இடங்களிலும் கூட கூட்டமைப்பின் முடிவு இதுவே ஆகும். அவ்வாறு எந்த இடத்திலாவது கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக நியமித்த ஒருவருக்கு எதிராக அதன் அங்கத்தவர்கள் தேர்தலில் நின்றாலோ அல்லது அதனை மீறிச் செயற்பட்டாலோ ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம்.

ஆகவே, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இங்கு தவறிழைத்துள்ளதால் அதன் நடவடிக்கைகளை தமிழரசுக் கட்சிதான் மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*