;
Athirady Tamil News

காலி கடற்படை முகாம் தாக்குதல்- எதிரி சாட்சியம்..!!

0

காலி கடற்படை முகாம் தாக்குதல்
விமானப்படை தாக்குதலால் நான் வலது காலை இழந்தேன் ஆயிக்கனக்கானவர்கள் காயமடைந்தார்கள் ——-எதிரி சாட்சியம்

காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் முதலாம் எதிரியின் சார்பில் ஆஐரான சிரேஸ.;ட சட்டத்தரணி கே.வி தவராசா சாட்சியினை நெறி;ப்படுத்துகையில் 1999ம்ஆண்டு புதுக்குடியிருப்பில் விமானப்படை குண்டுத்தாக்குதல் நடாத்தியதால் தான் காலை இழந்ததாகவும் ஆயிக்கனக்கானவர்கள் காயமடைந்தார்கள் எனவும்; எதிரி நீதிமன்றில் சாட்சியமளித்தார்

2006ம் ஆண்டு தை மாதம் காலி தெற்கு கடற்படை முகாமிற்கு தாக்குதல் நடாத்தி சுரங்க செனரத் என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன் மற்றும் 21 பேருக்கு கடும் காயத்தை ஏற்படுத்தி கொலை செ;;யய எத்தனித்ததாக கந்தையா இளங்கோஇ நிசாந்த எதிரிசிங்கஇ குணரத்ள கஐவீரஇ வைரமுத்து சரோஐhஇ மற்றும் பந்துள கவீர குணரத்ண என்பவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரிளால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீPழ் அரச தரப்பு சாட்சிகளாக 76 சாட்சியாளர்களை உள்ளடக்கி 22 குற்றச் சாட்டுக்கள சுமத்தப்பட்டு காலி மேல் நீதிமன்றில் ;வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

2012ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் முதலாம் எதிரியாக பெயர் குறிப்பிடபபட்டுள்ள கந்தையா இளங்கோவினால் சுயவிருப்பில் பயங்கரவாதத்தடைப்பிரிவ பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்ட குற்ற ஒப்பதல் வாக்குமூலத்தின் உண்மை விளம்பல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது
சிரேஸ்டஅரச சட்டத்தரணி அரசதரப்பு சாட்சியாளர்களின் சாட்சியங்களை நெறிப்படுத்தி விசாரணையை முடித்துக் கொண்ட பின்னர் முதலாம் எதிரியின் சார்பில் ஆஐரான சிரேஸ.;ட சட்டத்தரணி கே.வி தவராசா முதலாம் எதிரியின் சாட்சியினை நெறி;ப்படுத்துகையில் முதலாம் எதிரி தனது சாட்சியத்தில்,

தான் பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவன் எனவும் 1995ம் ஆண்டு பருத்தித்துறையிலிருந்து குடிபெயர்ந்தவர்களுடன் தானும் குடிபெயர்ந்து புதுக்குடியிருபிற்கு வந்து குடியேறியதாகவும் சாட்சியமளித்ததுடன்
1999ம்ஆண்டு புதுக்குடியிருப்பில் விமானப்படை குண்டுத்தாக்குதல் நடாத்தியபோது தானும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சிதறி ஓடும்பொழுது தான் நிலக்கண்ணி வெடியில் சிக்கி படுகாயத்திற்குட் பட்டதையடுத்து சத்திர சிகிகிட்சைக்கு உட்பட்ட நிலையில் தனது கால் அகற்றப்பட்டதாக சாட்சியமளித்தார்,

ஏதிரியின் சாட்சியத்தை குறுக்கு விசாரணை செய்த சிரேஸ்ட அரச சட்டத்தரணி எதிரியை பார்த்து
நீர் முக்கிய புலி உறுப்பினர் நீர் அரசிற்கு எதிராக புலிகள் அமைப்பிலிருந்து அரச படைகளுக்கு எதிராக தாக்கதலில் ஈடுபட்டபொழுது நிலக்கண்ணிவெடியில் சிக்கித்தான காலை இழந்தனீர் நீர் 1999ம்ஆண்டு புதுக்குடியிருப்பில் விமானப்படை குண்டுத்தாக்குதல் நடாத்தியதால் தான் காலை இழந்ததாக கூறுவது முற்றமுழுதாக உண்மைக்கு புறம்பானது விமானப்படை குண்டுத்தாக்கதலில் காலை இழந்ததாக பொய்ச் சாட்சியம் அளிக்கின்றீர் என கூறியபொழுது

எதிரியின் சார்பில் ஆஐரான சிரேஸ.;ட சட்டத்தரணி கே.வி தவராசா அரச சட்டத்தரணியின் கேள்விகளுக்கு கடும் ஆட்சேபனைபை நீதிமன்றில் முன்வைத்து தனது வாதத்தில்

இந்த வழக்கில்; அரச தரப்பால் இரண்டு சட்ட வைத்திய அறிக்கைகளை தாக்கல் செய்து இரண்டு சட்ட வைத்திய அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர் அந்த சாட்சியங்கiளிலும் அறிக்கைகளிலும் எதிரியின் கால் அகற்றப்பட்டமை மேலும் பல காயங்கள் எதிரியின் உடலில் உள்ளமை மிக தெளிவாக விபரமாக பதியப்பட்டுள்ளன,

ஏதிரி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் தடுத்து வைக்கபட்ட காலப்பகுதியில் பொலிசார் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் என எதிரி; இந்த நீதிமன்றில் சாட்சியம் அளித்திருக்கலாம் ஆனால் எதிரி தனது சாட்சியத்தில் 1999ம்ஆண்டு புதுக்குடியிருப்பில் விமானப்படை குண்டுத்தாக்குதல் நடாத்தியதால் தான் காலை இழந்ததாக நடந்த உண்மைச் சம்பவத்தை இந்த நீதிமன்;றில் சாட்சியம் அளித்துள்ளார் என்பதை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்ள என்பதை நீமன்றின் கவனத்திற்க கொண்டுவருவதுடன்

மேலும் இந்த நீதிமன்றில் நடைபெற்றுக் கொண்டிருப்பது எதிரியால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஓப்புதல் வாக்கமூலம் எதிரியினால் சுயமாக வழங்கப்பட்டதா? ஏன்ற உண்மை விளம்பல் விசாரணை இந்த விசாரணையில் எதிரியால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஓப்புதல் வாக்கமூலம் சுயமாக சொந்த விருப்பத்தில் எதிரியால் வழங்கப்பட்டது என நீதிமன்றம் கட்டளையிட்டால் மட்டுமே அந்த குற்ற ஓப்புதல் வாக்குமூலத்தின் உள்ளடகத்தை அரச தரப்பு எதிரிக்கு எதிரான சான்றாக பிரதான வழக்கு விசாரணையில் முன்வைக்க முடியும் ஆனால்
சிரேஸ்ட அரசசட்டத்தரணி குற்றஓப்புதல் வாக்கமூலத்தின் உள்ளடக்கத்தில் எதிரியை குறுக்கு விசாரணை செய்வதை நான் கடுமையாக ஆட்சேபிப்பதுடன் இதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமென தனது சட்ட ஆட்பேணையை முன்வைத்ததையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி மேலதிக விசாரணையை ஏப்ரல் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைத்தார்

சட்டமா அதிபர் சார்பில் சிரேஸ்;ட அரச சட்டத்தரணி மொகமட் பாரியும்
முதலாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி செல்வி தர்மஐh தர்மராஐவின் அணுசரனையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவும் மற்றைய எதிரிகள் சார்பில் செல்வராஐh துஸ்யந்தனும் ஆஐராகினர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*