;
Athirady Tamil News

மறக்க முடியாத மார்ச்.. ஒரே மாதத்தில் கிரிக்கெட் உலகில் நடந்த 7 அதிர்ச்சி சம்பவங்கள்..!!

0

மார்ச் மாதத்தில் மட்டும் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இந்தியா தொடங்கி வங்கதேசம், ஆஸ்திரேலியா என எல்லா அணியிலும் மோசமான பல திருப்பங்கள் நடந்து இருக்கிறது. இந்த மாசம் பெரிய போட்டிகள் நிறைய நடந்த காரணத்தால் இப்படி ஆச்சர்யப்படக்கூடிய சம்பவங்கள் நடந்துள்ளது. தினேஷ் கார்த்திக், ஷமி, ஸ்மித் என ரோலர் கோஸ்டர் போல கிரிக்கெட் உலகம் ஏறி இறங்கி உள்ளது. ஏப்ரலில் தொடங்கும் ஐபிஎல் போட்டி இன்னும் என்ன விஷயங்களை கொண்டு வர இருக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஷமி பிரச்சனை இந்த மாதத்தில் நடந்த முக்கியமான பிரச்சனைகளில் ஷமியின் பிரச்சனையும் ஒன்றாகும். ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பாலியல் குற்றம், சூதாட்ட குற்றம், பண மோசடி என நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார்.

ஆனால் தற்போது சூதாட்ட புகாரில் மட்டும் ஷமி நிரபராதி என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவது போல இல்லை. ஹீரோ தினேஷ் கார்த்திக் வங்கதேசத்திற்கு எதிராக இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இதில் தினேஷ் கார்த்திக் கடைசி பாலில் லோ சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். ஒரே நாளில் உலக அளவில் இதன் மூலம் தினேஷ் கார்த்திக் வைரல் ஆகி, 14 வருட உழைப்புக்கான பெருமையை பெற்றார்.

நாகினி டான்ஸ் அதேபோல் இந்த நிதாஸ் கோப்பை தொடரில் இன்னொரு காமெடியான சம்பவமும் வைரல் ஆனது. வங்கதேச வீரர்கள் ஆடிய பாம்பு டான்ஸ் ”நாகினி டான்ஸ்” என்ற பெயரில் உலகம் முழுக்க டிரெண்ட் ஆனது. இந்த டான்ஸ் தற்போது விளம்பர மாடலாக வேறு மாற உள்ளது. வங்கதேச வீரர்களில் காமெடியான டான்ஸை யாருமே மறக்க மாட்டார்கள். உலகக்கோப்பை தகுதி இதே சமயத்தில்தான் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியும் நடைபெற்று வந்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஆப்கானிஸ்தான் அணி கஷ்டப்பட்டு உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வாகி இருக்கிறது. உலகின் மிகவும் இளம்வயது கேப்டனான ரஷீத் கான் அவரது அணியை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார்.

மிகவும் குறைந்த போட்டியில் 100 விக்கெட் எடுத்து ரஷீத் சாதனை படைத்ததும் இந்த மாதம்தான். பீட்டர்சன் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததும் மிகவும் அதிர்ச்சியான சம்பவம் ஆகும். 2018 இறுதியில் இருந்து அனைத்து விதமான போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் அடுத்த உலகக் கோப்பை போட்டியில் விளையாட மாட்டேன் என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

மனைவி குறித்து ஆஸ்திரேலியாவுக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில்தான் முக்கிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. இந்த தொடரின் டெஸ்ட் போட்டி ஒன்றின் சாப்பாடு இடைவெளியில் வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பி செல்லும் போது வார்னருக்கும் குயிண்டன் டி காக்கும் இடையில் சண்டை வந்து இருக்கிறது. இந்த சண்டை கொஞ்ச நேரத்தில் பெரிதானது. வார்னரின் மனைவி குறித்து குயிண்டன் டி காக் திட்டி இருக்கிறார். இது பெரிய பிரச்சனை ஆனது. இதே போட்டியில் மோசமான நடத்தை காரணமாக தென்னாபிரிக்க வீரர் ரபாடாவிற்கு 2 போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.

தடை அதே தொடரில் அடுத்த பெரிய அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இதில் ஸ்மித், கேமரூன் ஆகிய இருவரும் உப்புத்தாள் போன்ற சாதனம் கொண்டு பந்தை தேய்த்து இருக்கிறார்கள். பந்தை மாற்றும் போது, உப்புத்தாளை வைத்து தேய்த்து இருக்கிறார்கள். பந்து நன்றாக சுழல வேண்டும் என்று இப்படி செய்துள்ளார்கள். கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒருவருடம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் கேமரூனுக்கு 9 மாதம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 2 =

*