;
Athirady Tamil News

பள்ளிக்கு எம்.பி நிதி ஒதுக்கிய டெண்டுல்கருக்கு காஷ்மீர் முதல் மந்திரி நன்றி..!!

0

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் டிரக்முல்லா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் கட்டுமான பணிகளுக்காக சச்சின் டெண்டுல்கர் தனது எம்.பி நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கியுள்ளார்.

இந்த நிதியில் இருந்து அந்த பள்ளிக்கு 10 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நிர்வாக அலுவலகம், பிரார்த்தனை அறை மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் உள்ள பள்ளிக்கு எம்.பி தொகுதியில் இருந்து நிதி ஒதுக்கிய சச்சின் டெண்டுல்கருக்கு அம்மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் கூறுகையில், ”எம்.பி நிதியிலிருந்து காஷ்மீரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தொகை ஒதுக்கியதற்காக நன்றி சச்சின். அவர் இப்போது மைதானத்தில் விளையாடவில்லை என்றாலும் எல்லோருக்கும் எப்போதும் தூண்டுகோலாக இருந்து வருகிறார்” என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 18 =

*