சமூக வலைத்தளங்கள் பயன்பாடு விவரங்களை குறிப்பிட வேண்டும்- அமெரிக்க விசாவுக்கு புதிய நிபந்தனை..!!

அமெரிக்காவில் பணியாற்றவோ, கல்வி கற்கவோ, சுற்றுலாவாகவோ அமெரிக்கா செல்ல விரும்புவர்கள் விசா கேட்டு விண்ணப்பிக்கும் போது அவர்களது வீட்டு முகவரி மற்றும் குற்றப்பத்திரிக்கை தொடர்பான விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நாட்டில் பயங்கரவாத கும்பல்கள் நுழைவதை தடுக்கும் விதமாக விசா வழங்குவதில் புதிய நிபந்தனைகளை அரசு எடுத்துள்ளது. அதற்கான புதிய விசா விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அந்த விண்ணப்பத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்திய கைபேசி எண், இமெயில், சமூக வலைத்தளங்கள் பயன்பாடு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் கேட்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு சென்ற அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த புதிய விசா நிபந்தனைகள் குறித்த விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன். இதன் மூலம் பயங்கரவாதத்தை தடுக்கலாம் என கூறப்படுகிறது. #americavisa #tamilnews