;
Athirady Tamil News

சேவை மனப்பாங்குள்ளவருக்கு சிவில் அமையத்தில் இணைய வாய்ப்பு..!!

0

சமூக நோக்கம் கொண்ட சேவை மனப்பாங்குள்ள அனைவரும் சிவில் மற்றும் அரசியலுக்கான உரிமைகளுக்கான அமையத்தில் இணைந்துக் கொள்ள முடியுமென, திருகோணமலை மாவட்ட அமையத்தின் தலைவர் ஆர்.டீ.தர்மரத்தினம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட சிவில் மற்றும் அரசியலுக்கான உரிமைகளுக்கான அமையத்தின் புதிய நிருவாகத் தெரிவானது நேற்று (வியாழக்கிழமை) கல்முனை திருகோணமலை மாவட்ட அமையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ் மக்களின் துயரை போக்கும் ஓர் அமைப்பாகவே இந்த அமைப்பு செயற்படும். இதனால் தான் திருகோணமலையில் இவ்வமைப்பை ஆரம்பித்து மக்கள் நலன் சார்ந்த பல வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றோம்.

அதனால் தான் இதனை அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பிப்பதற்கு முன்வந்துள்ளோம்.

இந்தவகையில் கிராம மட்டத்திலுள்ள அடிமட்ட பிரச்சனைகளை அரசுக்கு கொண்டுச் சென்று உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க உழைத்தல். மக்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது அதற்கான சரியான ஆலோசனைகளை வெளிக்கொணர்தல்.

அரச சேவையாளர்களின் அசமந்தப்போக்கினை அவதானித்து அதனை உரிய முறையில் தட்டிக்கேட்டல். மக்களது தேவைகளை உரிய அரச அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தல் மற்றும் நடுத்தர ஏழை மக்களின் இயலாமையை வெளிக்கொணர்தல்.

வாழ்வாதாரம், நீர், காணி பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முனைதல் போன்ற விடயங்களை மையப்படுத்தியே இந்த அமைப்பு செயற்பட இருக்கின்றது.

ஆகவே இந்த அமைப்பில் சமூக நோக்கம் கொண்ட சேவை மனப்பாங்குள்ள அனைவரும் இணைந்து கொள்ள முடியும்’ என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*