;
Athirady Tamil News

மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி..!!

0

பொலன்னறுவை நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும், 5 மாடிக் கட்டடத்தின் நான்காம் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளர் ஒருவர், படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிழிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் (30) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், பொலன்னறுவை- கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய, டபிள்யு.எம்.தயானந்த, என்பவரே இவ்வாறு உயி​ரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*