;
Athirady Tamil News

கண்டி -​தெல்தோட்டை தொடர் மனை குடியிருப்பொன்றில் தீப்பரவல் – 5 வீடுகள் சேதம்..!!

0

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தெல்தோட்டைப் பகுதியில் உள்ள லயன் குடியிருப்பொன்றில் திடீரென பரவிய தீயினால் 5 குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளதாக, கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (30) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் இலக்க லயன் குடியிருப்பிலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளது. பிரதேசவாசிகள், பொலிஸார் இணைந்து தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகிறது.

தீ விபத்தில் உயிராபத்துகள் ஏற்படவில்லையெனவும், ஒரு குடியிருப்பு முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் ஏனைய 4 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 1 =

*