;
Athirady Tamil News

பேரூந்தின் சில்லில் சிக்கி நபரொருவர் பலி ..!!

0

கஹடகஸ்திகிலிய பேரூந்து தரிப்பிடத்தில் தனியார் பேரூந்தொன்றின் சில்லில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.தெமடவெவ பகுதியில் இருந்து வந்த பேரூந்தில் இருந்து இறங்கி குறித்த பேரூந்திற்கு முன்னால் செல்ல முற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பேரூந்தின் சில்லில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெமடவெவ – ஓலுவெவ பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*