;
Athirady Tamil News

மண் சரிவில் சிக்கி 2 குழந்தைகள் பலியான பரிதாபம்..!!

0

பீகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் உள்ள கான்சார் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் சில குழந்தைகள் விளையாட்டிற்காக அருகில் உள்ள மண் குவியலில் இருந்து மண் எடுத்தனர். அப்போது திடீரென மண் குவியல் சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தைகள் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இறந்த குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மண் சரிவில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eight =

*