;
Athirady Tamil News

திருமணம் செய்ய மறுத்ததால் எரிக்கப்பட்ட ஐதராபாத் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!!

0

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் தனது வகுப்பில் உடன் படிக்கும் 16 வயது சிறுமியை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளான்.

இந்நிலையில், அந்த சிறுமியின் தாயார் சமீபத்தில் அந்தப் பெண்ணை வேறொருவருடன் திருமணம் செய்துவைக்க நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார்.

இதை அறிந்த மாணவன் கடந்த 27-ம் தேதி தனது காதலியின் வீட்டுக்கு சென்றான். என்னுடன் வந்துவிடு எங்காவது சென்று திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கலாம் என வற்புறுத்தினான். அவனது விருப்பத்துக்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் அங்கிருந்த மண்ணெண்ணையை அவள்மீது ஊற்றி உயிருடன் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். இதில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்ட அந்த சிறுமி ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தாள்.

இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #tamilnews #HyderabadGirl

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − one =

*