காவிரி விவகாரத்திற்காக பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் – கமல்ஹாசன்..!!

காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.
இந்நிலையில், காவிரி விவகாரத்துக்காக பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியத்துக்காக பதவிகளை தியாகம் செய்ய தயாராக இருக்கவேண்டும். காவிரி விவகாரத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும். காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும். தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்புண்டு. என தெரிவித்துள்ளார். #CauveryManagementBoard #KamalHaasan