;
Athirady Tamil News

சிபிஎஸ்இ மறுதேர்வை புறக்கணியுங்கள் – மாணவர்கள், பெற்றோருக்கு ராஜ்தாக்கரே வேண்டுகோள்..!!

0

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 12ம் வகுப்புக்கான பொருளாதாரம், 10ம் வகுப்புக்கான கணிதம் ஆகியவற்றின் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த இரு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது.

இதற்கிடையே, 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ அறிவித்துள்ள மறுதேர்வை மாணவர்களும் பெற்றோரும் புறக்கணிக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு மறு தேர்வை அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும். வினாத்தாள் வெளியானது மத்திய அரசின் தவறு. அதற்கான பதிலை அவர்கள் தான் அளிக்க வேண்டும். மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது.

எனவே, இந்த மறு தேர்வை மாணவர்களும் பெற்றோர்களும் புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில் அடுத்து வரும் அரசும் இதே முறையை தான் பின்பற்றும். என்னை சந்தித்த பல பெற்றோரும் மறு தேர்வு என்பது மோசமான முடிவு என்றே கருத்து தெரிவித்துள்ளனர் என்றார். #CBSE #ReExam #Rajthackeray #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*