;
Athirady Tamil News

வடக்கு முத­ல­மைச்­சரை சாடு­கி­றார் எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா..!!

0

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யைப் பெயர் சொல்­லும் சபை­யாக மாற்­றி­ய­மைக்க வேண்­டு­மென்­றும், நிர்­வா­கம் திறம்­பட செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்­றும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், மாந­கர முதல்­வ­ருக்கு அறி­வுரை வழங்­கி­யி­ருப்­பது ‘ஊருக்கு உப­தே­சம், உனக்­கல்­லடி’ என்ற பழ­மொ­ழிக்கு வலுச் சேர்ப்­ப­தாக அமைந்­துள்­ளது இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: கடந்த நான்­கரை ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபையை வினைத்­தி­ற­னற்ற ஒரு மாகாண சபை­யாக நிர்­வ­கித்து வரும் முத­ல­மைச்­சர் மாந­கர சபையை திறம்­ப­டச் செயற்­ப­டுத்த வேண்­டு­மென்று கோரி­யி­ருப்­பது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது.

மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளால் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­கச் சுமத்­தப்­பட்ட நிதி மோசடி, அதி­கார முறை­கேடு, பார­பட்­சம், ஊழல் மற்­றும் ஒழுக்க ரீதி­யான குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக முத­ல­மைச்­ச­ரால் அமைக்­கப்­பட்ட விசா­ர­ணைக்­குழு பல்­வேறு அதி­கார முறை­கே­டு­க­ளைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தது.

நிதிக் கையா­டல்­கள் தொடர்­பாக மேல­திக விசா­ர­ணை­ க­ளிற்­குப் பரிந்­து­ரை­கள் செய்­தி­ருந்­தும் அவை­கள் தொடர்­பாக கடந்த ஒன்­பது மாதங்­க­ளாக எவ்­வித நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­கவில்லை.

வட மாகா­கண சபையை ஒரு கேலிக்­கூத்­தாக்­கி­ யி­ருக்­கும் முத­ல­மைச்­சர் மாந­கர சபை­யைப் பெயர் சொல்­லும் சபை­யாக மாற்றி அமைக்­கக் கோரி­யி­ருப்­பது நகைப்­பிற்­கு­ரி­யதே.

அவ் விசா­ர­ணைக் குழு அறிக்­கை­யில் ஒரு அமைச்­சருக்கு எதி­ரான குற்­றச் சாட்­டு­கள் விசா­ர­ணை­யின் போது சந்­தே­கத்துக்கு அப்­பாற்­பட்ட விதத்­தில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­து­டன், நிதி மேசடி போன்ற குற்­றச்­சாட்­டு­கள் தொடர் விசா­ரணை செய்­வ­தற்கு விதந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தும் எவ்­வித தொடர் விசா­ர­ணை­யை­யும் மேற்கொள்ளவில்லை.

குறிப்­பிட்ட முன்னாள் அமைச்­ச­ரால் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘தமிழ்த் தேசிய பசுமை இயக்­கத்­தின்’ பணி­ய­கத்தை முன்­னின்று திறந்து வைத்து விட்டு யாழ். மாந­கர சபை­யில் ஈ.பி.டி.பி. ஆட்­சிக் காலத்­தில் நடை­பெற்ற ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் விசாரிக்க வேண்­டு­மென்று கோரி­யி­ருப்­பது வெட்­கித் தலை­கு­னிய வேண்­டிய செயல்.

அது மட்­டு­மல்ல யாழ். மாந­கர சபை­யில் ஈ.பி.டி.பி ஆட்­சிக் காலத்­தில் நடை­பெற்ற ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக விசாரிக்க முத­ல­மைச்­ச­ரால் அமைக்­கப்­பட்ட கந்­தையா அரி­ய­நா­ய­கம் மற்­றும் ஓய்வு பெற்ற நீதி­பதி வசந்­த­சே­னன் ஆகி­யோ­ரின் விசா­ரணை அறிக்­கை­கள் முறையே 2015 ஜன­வரி, ஒக்­ரோ­பர் மாதங்­க­ளில் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் அந்த அறிக்­கை­க­ளைச் சபைக்­குச் சமர்ப்­பிக்­கும்­படி மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளால் பல முறை கோரிக்­கை­கள் விடுக்­கப்­பட்­டிருந்­தது.

இது­வரை சபைக்­குச் சமர்ப்­பிக்­கா­மல் இருந்து விட்டு இப்­போது மாந­கர சபை முதல்­வரை விசா­ரணை நடத்­து­மாறு கோரி­யி­ருப்­பது இன்­னொரு கேலிக் கூத்­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது – – என்­றுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*