ப்ளிப்கார்ட் ஆர்டர் தாமதமானதால் டெலிவரி பாயை 20 முறை கத்தியால் குத்திய பெண்..!!

டெல்லியைச் சேர்ந்தவர் கமல் தீப் (30). இவர், ப்ளிப்கார்ட்டில் 11 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவரது ஆர்டர் மர்ச் 21-ம் தேதி டெலிவரி செய்யப்படும் என ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த போனை டெலிவரி செய்யும் இளைஞர், கமல் தீப் வீட்டின் சரியான முகவரி தெரியாததால், 2 நாட்கள் தாமதமாக போனை கமலிடம் கொண்டு சேர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல் தீப், டெலிவரி செய்ய வந்த அந்த இளைஞரை கத்தியால் 20 முறைக்கு மேல் குத்தியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ப்ளிப்கார்ட் ஊழியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊழியரை தாக்கிய கமல் தீப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாக்கப்பட்ட நபர் கேஷவ் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கேஷவ் அளித்த வாக்குமூலத்தையும், சி.சி.டி.வி. பதிவுகளையும் வைத்து அந்த இளைஞரை தாக்கிய பெண்ணையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு ப்ளிப்கார்ட் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட நபருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துகொள்ளப்படும் எனவும் ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. #FlipkartDeliveryDelay #CourierManStabbed #tamilnews