;
Athirady Tamil News

பேருந்து இருக்கைக்காக மோதல்: பெண்ணை தாக்கிய தம்பதியருக்கு பொலிஸ் வலைவீச்சு.!!

0

கனடாவில் பேருந்து இருக்கைக்காக ஏற்பட்ட மோதலில் 61 வயது பெண்ணை சரமாரியாக தாக்கிய தம்பதியரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கனடாவின் Surrey நகர 96B பேருந்தில் கடந்த 20-ஆம் திகதி பயணித்த தம்பதியருக்கும், 61 வயது பெண்மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இருக்கைக்காக ஏற்பட்டுள்ள மோதல், கைகலப்பில் சென்று முடிந்ததில் குறித்த பெண்மணி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, தாக்கப்பட்ட பெண் தன் செல்போனில் தம்பதியரை படமெடுக்க முயன்ற போது அதை பிடிங்கி வெளியில் வீசியுள்ளனர், அதில் செல்போன் சுக்குநூறாக நொருங்கியுள்ளது.

அதன்பின் பேருந்தைவிட்டு 88 அவென்யூ அருகே இறக்கி விடப்பட்ட தம்பதியர், பியர் க்ரீக் ப்ளாசாவிற்குள் சென்று பின் தலைமறைவாகியுள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு பெண்ணின் கை உடைபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மார்பெலும்பில் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ட்ரெனன் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + sixteen =

*