;
Athirady Tamil News

வாடிக்கையாளரின் உணவில் எச்சில் துப்பிய பெண் ஊழியர்: வைரல் வீடியோ..!!

0

அமெரிக்காவிலுள்ள Pita Pit எனும் துரித உணவு கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட உணவில் எச்சில் துப்பியது அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மொன்டானா நகரில் உள்ள Pita Pit துறித உணவு கடையில், உணவு வாங்க வந்த வாடிக்கையாளருக்கும் கடையின் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் எல்லை மீறியதால் ஆத்திரம் அடைந்த உணவு கடையின் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட உணவில் எச்சில் துப்பி அவரது முகத்தில் எறிந்துள்ளார்.

வாடிக்கையாளரினை தகாத வார்த்தைகளால் அந்த ஊழியர் திட்டியுள்ளார், இந்த நிகழ்வினை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ShaeLynn தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை இதுவரை 3,00,000 பேர் பார்த்துள்ளனர்.

ஊழியரின் தவறான நடவடிக்கைக்கு வாடிக்கையாளரிடம் Pita Pit துறித உணவக உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் இது போன்ற நிகழ்வு நடைபெறாது என்றும் ஊழியரை பணியை விட்டு நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 5 =

*