;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு 17 மணி நேர பயணம் எப்படி இருந்தது? ஒரு பயணயின் அனுபவம் இதோ..!!

0

அவுஸ்திரேலியாவின் Perth நகரிலிருந்து லண்டனுக்கு Qantas நிறுவனத்திற்கு சொந்தமான QF9 என்ற பயணிகள் விமானம் 200 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்களுடன் பயணித்து சுமார் 17 மணிநேரம் 20 நிமிடத்தில் Heathrow விமான நிலையத்தில் அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து, பிரித்தானியாவுக்கு வர வேண்டுமென்றால் இடையில் ஏழு நிறுத்தங்கள் மற்றும் 4 நாட்கள் ஆகும், ஆனால் நாங்கள் தற்போது 17 மணி நேரத்தில் பயணத்தை முடித்துள்ளது.

இந்த விமானப்பயணத்தில் அனுபவம் குறித்து அதில் பயணித்த பயணி ஒருவர் பகிர்ந்துள்ளார்.

விமான பயணம் மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. அதில் வழங்கப்பட்ட உணவுகள் மிகவும் ருசியாக இருந்தது. அவற்றை சாப்பிட்டு உங்கள் வயிறு நிரம்பினாலும், வயிறு கனமானதாக இருக்காது.

இலவச தின்பண்டங்கள், உணவுகள் மற்றும் பானங்கள், நிரப்பி வைக்கப்பட்டு, ஒரு கபோட்டில் வைக்கப்பட்டுள்ளன, அவை வேண்டுமானால் பயணிகள் தாங்களாகவே சென்று எடுத்து சாப்பிடலாம்.

வழங்கப்படும் உணவுகள் மிகவும் தரமானதாக பாதுகாக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி விமானத்தில் தூங்குவதற்கு jet lag வடிவமைக்கப்பட்டுள்ளது. இருக்கை வசதிகளும் சிறப்பாக உள்ளது.

தூங்கும்போது பயன்படுத்துவதற்கு முகமூடி, ear buds, போர்வை மற்றும் பல் துலக்குவதற்கு tooth brush ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 8 =

*