;
Athirady Tamil News

பிரித்தானியாவில் அடிமைகளாக பயன்படுத்தப்படும் சிறுவர்கள்..!!

0

பிரித்தானியாவில் சிறுவர்கள் நவீன அடிமைகளாக பயன்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு தேசிய குற்றவியல் ஆணையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

நவீன அடிமைகளாக இருக்கும் சிறுவர்கள் போதைபொருள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.

இது தொடர்பாக 5,145 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த ஆணையம் கூறியுள்ளது.

நகர் பகுதியில் இருக்கும் சிறுவர்கள் மூலம் ஹெராய்ன் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் கிராமப்புற மற்றும் கடலோர பகுதிகளில் இருக்கும் சிறுவர்கள் மூலம் கொக்கேய்ன் போன்ற போதை பொருள்களை விற்பனை செய்ய இவர்களை சில கும்பல்கள் பயன்படுத்துவதாக தெரிகிறது.

2009ம் ஆண்டு முதல் இந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2009ல் இருந்ததை விட 36% அதிகரித்துள்ளது.

2016ம் ஆண்டு மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் என கருதப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 66% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன அடிமைத்தனம் தொடர்பாக பதிவான வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு (1,744) பாலியல் நோக்கங்களுக்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

2118 சிறுவர்கள் இந்த ஆண்டு மீட்கப்பட்டு மறுவாழ்வுக்காக உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல் கடந்த ஆண்டு 1,278 பேருக்கு உதவிகள் வழங்கியதாக பிரித்தானியா தேசிய குற்றவியல் ஆணையம் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 15 =

*