;
Athirady Tamil News

பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற தாய்: முன்னாள் கணவருக்கு மிரட்டல் கடிதம்..!!

0

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தனது மகனை கழுத்தை நெறித்தும் தலையணையை முகத்தில் அழுத்தியும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shropshire பகுதியைச் சேர்ந்தவர், Lesley Speed (44), விவாகரத்து பெற்று கணவரை பிரிந்து வாழும் நிலையில் ஏழு வயது மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதற்கு முன்பாக, முன்னாள் கணவருக்கு எழுதிய கடிதத்தில் “நீ சாகும் வரை இந்த வலியை அனுபவிப்பாய் என்று நம்புகிறேன்” என்று எழுதியிருந்தாள்

அவளது இந்நாள் கணவராகிய Mr Jones, தனது மனைவி தன்னைத்தானே தாக்கிக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களுடன் குளியலறையில் கிடந்ததாகவும், அவரைக் கண்டதும் ” நான் அவனைக் கொன்று விட்டேன், முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொன்று விட்டேன், அவன்இப்படிக் கஷ்டப்படுவதை என்னால் பார்க்கமுடியவில்லை” என்று கூறியதாகத் தெரிவித்தார்.

அவளது அறையில் கிடந்த கடிதங்களில் “Archie செத்தாலும் கூட பரவாயில்லை, ஆனால் அவனை அவனது தந்தையுடன் போக விட மாட்டேன்”என்று எழுதி வைத்துள்ளாள்.

கொல்லப்பட்ட ஏழு வயது சிறுவனாகிய Archieயின் தந்தை Mr Spriggs “எனது மகனின் இழப்பு வாழ்நாள் முழுவதும் எனக்கு ஒரு பேரிழப்பாகவே இருக்கும், சொந்த மகனை அடக்கம் செய்யும் துயரம் யாருக்கும் வரக்கூடாது” என்று துயரம் பொங்க தெரிவித்தார்.

பத்து பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்கிய நடுவர்கள் குழு ஒன்று இரண்டு வார விசாரணைக்குப்பின்பு Speed என்னும் அந்தப் பெண் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளது.

நீதிபதி Mr. Nicol, செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 6 =

*