;
Athirady Tamil News

மரணப்படுக்கையில் காதலியை மணந்த பிரான்ஸ் ஹீரோ: நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!

0

பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணுக்கு பதிலாக தன் உயிரை பணயம் வைத்த பொலிஸ் அதிகாரி aLieutenant Colonel Arnaud Beltrame, தனது மரணப்படுக்கையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணாகிய Marielleஐக் கைப்பிடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் அவர்களது திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார் Father Jean-Baptiste, ”அவருக்கு நான் திருமணத்திற்கான திரு விருந்தையும், இறுதித் திருவிருந்தையும் கொடுத்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Lieutenant Colonel Arnaud Beltrame, மற்றும் Marielleஇன் திருமணம் வரும் ஜூன் மாதம் நடப்பதாக இருந்தது.இந்நிலையில் தீவிரவாதத் தாக்குதலில் இன்னொருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர் தன்னுயிரைக் கொடுத்தார்.

Arnaudஇன் தாயார், தனது மகனின் செயல் தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்றும் அவன் எப்போதுமே அப்படித்தான், தன் தாய் நாட்டுக்காக எல்லவாற்றையும் கொடுக்கும் குணம் உடையவன் அவன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் யாருக்கு பதிலாக தனது உயிரை பணயம் வைத்தாரோ அந்தப் பெண் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக அவரது சக ஊழியரான பல்பொருள் அங்காடியின் மேலாளர் Samia Menassi என்பவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − four =

*