;
Athirady Tamil News

வலி.வடக்­கில் 700 ஏக்­கர்­கள் விரை­வில் விடு­விக்­கப்­ப­டும்..!!

0

வலி. வடக்­கில் இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து மேலும் 700 ஏக்­கர் நிலப் பரப்பு விரை­வில் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பருத்­தித்­துறை – பொன்­னாலை வீதி, தமிழ் – சிங்­க­ளப் புத்­தாண்­டு­டன் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்­காக யாழ்ப்­பா­ணத்­திற்கு இரு நாள் பய­ண­மாக வந்­தி­ருந்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர், மாவட்­டச் செய­லர் உள்­ளிட்ட முக்­கிய தரப்­பி­ன­ரு­டன் சந்­திப்பு நடத்­தி­யி­ருந்­தார். இந்­தச் சந்­திப்­புக்­க­ளின் போதே மேற்­படி விட­யங்­கள் கூறப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

வலி.வடக்­கில் இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் இன்­ன­மும் 4 ஆயி­ரம் ஏக்­கர் வரை­யில் உள்­ளது. அவற்­றில் 550 தொடக்­கம் 700 ஏக்­கர் வரை­யி­லான மக்­கள் குடி­யி­ருப்பு மே மாதம் அள­வில் விடு­விக்­கப்­ப­ட­லாம் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை கடந்த பெப்­ர­வரி மாதம் 6ஆம் திகதி அரச தலை­வர் யாழ்ப்­பா­ணத்­திற்கு தேர்­தல் பரப்­பு­ரைக்­காக வந்­த­போது, பருத்­தித்­துறை – பொன்­னாலை வீதி­யில் இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுக்­குள் உள்ள பகுதி திறக்­கப்­பட்­டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − ten =

*