;
Athirady Tamil News

திட்­டங்­களைத் தயா­ரிக்­கும் போதே எங்­க­ளை­யும் பங்­கா­ளி­யாக்­குங்­கள்- வடக்கு முதல்வர்..!!

0

வடக்­குக்­கான திட்­டங்­களை கொழும்பு அரசு தயா­ரிக்­கும்­போதே எங்­க­ளை­யும் அதில் உள்­வாங்­குங்­கள். திட்­டங்­களைத் தயா­ரித்த பின்­னர் எங்­களை அதில் இணைந்துக் கொள்­ளுங்­கள், ஏற்­றுக் கொள்­ளுங்­கள் என்று திணிக்­க­ வேண்­டாம்.

இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், நிதி மற்­றும் ஊடக அமைச்­சர் மங்­கள சம­ர­வீ­ர­வி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, மத்­திய வங்கி ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சு­வாமி ஆகி­யோரை, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று மதி­யம் நேரில் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின் முடி­வில் முத­ல­மைச்­சர் ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­த­தா­வது, அமைச்­சர் நடப்பு ஆண்­டில் ஒதுக்­கப்­பட்ட ஆயி­ரம் மில்­லி­ய­னுக்கு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள செயற்­பா­டு­கள் பற்றி கலந்­து­ரை­யா­டி­னர். அதிலே எங்­க­ளை­யும் பங்­கு­தா­ரர்­க­ளா­கச் சேர்த்து கொள்­ளும்­படி கேட்­டி­ருந்­தேன். மத்­திய வங்­கி­யால் மக்­க­ளுக்கு வழங்­கும் நன்­மை­கள் பற்றி குறிப்­பிட்­டி­ருந்­தார்.

50 ஆயி­ரத்­துக்கு குறை­வான கடனை பெற்­றுக்­கொள்­ப­வர்­கள் ஆறு மாதத்­துக்­குள் வட்டி மற்­றும் முத­லினை செலுத்த தேவை­யில்லை என்ற சட்­டம் வந்­தி­ருக்­கின்­றது.கடனை பெற்­ற­வர்­கள் அதற்­கான தொழில் முயற்­சி­களை மேற்­கொண்டு அதனை மீள­வும் செலுத்­தி­னால் போது­மா­ன­தா­கும். இவ்­வாறு பல்­வேறு திட்­டங்­களை மத்­திய வங்கி அறி­மு­கம் செய்­தி­ருக்­கின்­றது. அதனை மக்­க­ளுக்கு நாம் தெரி­யப்­ப­டுத்­து­வோம் என்று கூறி­யி­ருந்­தேன்.

கொழும்பு அரசு எந்­த­வொரு செயற்­திட்­டத்தை தயா­ரிக்­கும் போது எங்­களை உள்­வாங்­கு­மாறு நான் கூறி­யி­ருந்­தேன்.திட்­டத்தை தயா­ரித்து விட்டு எங்­களை இணைத்து கொள்­ளுங்­கள், ஏற்று கொள்­ளுங்­கள் என்­பதை விட திட்­டங்­கள் தயா­ரிக்­கும் போது எமது உள்­ளீ­டு­க­ளை­யும் உள்­வாங்­கு­மாறு கூறி­யி­ருந்­தேன். அதி­கார பர­வ­லாக்­கல் இருப்­பதை ஏற்­றுக் கொண்­டால் எங்­க­ளை­யும் உள்­வாங்க வேண்­டும் தயா­ரிக்க நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தேன். அமைச்­சர் மங்­கள கொள்கை அள­வில் ஏற்­றுக்­கொண்­டார்.

மகா­வலி அதி­கா­ர­ச­பை­யின் அதி­கா­ரம் முழு நாட்­டுக்­கும் பர­வி­யி­ருப்­ப­தால் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட அதி­கா­ரப் பர­வ­லாக்­கல் அதிலே கருத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மாக மகா­வலி அதி­கா­ர­சபை தான்­தோன்றி தன­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. அதனை நிறுத்த வேண்­டும் என்­றால் அந்­தச் சட்­டம் மீளப்­பெ­றப்­பட வேண்­டும் – என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 3 =

*