;
Athirady Tamil News

யாழில் தந்தை செல்வாவின் 120வது பிறந்த தினம் அனுஸ்டிப்பு..!! (படங்கள்)

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிறுவக தலைவரும் அரசியல் மூதறிஞருமான தந்தை செல்வாவின் 120வது பிறந்த தினம் இன்று(31) அனுஸ்ரிக்கப்பட்டது

யாழ் நகரில் செல்வா சதுக்கத்திலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அத்துடன் தந்தை செல்வநாயகத்தின் சமாதியிலும் அரசியல் பிரமுகர்களினால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*