;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீர் – போக்குவரத்து போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கானாபால் பகுதியில் போக்குவரத்து போலீசார் இன்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது வந்த பயங்கரவாதிகள் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். காயமடைந்த போக்குவரத்து போலீசாரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + nine =

*