;
Athirady Tamil News

ராஜஸ்தானில் போலீஸ் நிலைய மாடியில் வெளிநாட்டு ஜோடி அத்துமீறல்..!!

0

உதய்ப்பூரில் காந்தகார் போலீஸ் நிலையம் பழைமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதன் கீழ் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தையொட்டி கோவில் மற்றும் நெருக்கமான கட்டிடங்கள் அமைந்துள்ளது.

இந்த போலீஸ் நிலைய கட்டிடத்தின் மொட்டை மாடியில் வெளிநாட்டு ஜோடி உல்லாசமாக இருந்தது. பட்டப்பகலில் நடந்த அரங்கேற்றத்தை எதிரே உள்ள கட்டிடத்தில் இருந்த யாரோ வீடியோவில் படம் பிடித்து வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

ராஜஸ்தான் முழுவதும் பல்வேறு நகரங்களில் பரவியது. இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

உதய்ப்பூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத் கோயல் கூறுகையில், “அது போலீஸ் நிலைய கட்டிடம் அல்ல என்று முதலில் மறுத்தார். பின்னர் அவர் கூறும்போது, போலீஸ் நிலையத்தின் மொட்டை மாடிக்கு செல்ல அருகில் உள்ள கோவில் வழியாக வழி உள்ளது. அதன் வழியாகத்தான் வெளிநாட்டு ஜோடி சென்று இருக்கிறது. இது போலீஸ் நிலையத்துக்குள் இருக்கும் போலீசாருக்கு தெரிய வாய்ப்பு இல்லை” என்று மழுப்பினார்.

வெளிநாட்டு ஜோடி இது போன்று அநாகரீகமாக நடந்து கொண்டதை போலீசார் தடுத்து இருக்கலாம். அதை அவர்கள் கண்டு கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + four =

*