;
Athirady Tamil News

தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி கனடா வாலிபர் பலி..!!

0

கனடாவைச் சேர்ந்த எம்.என்.ஜான்(21) மற்றும் பி.ஒய்.சாலமன் என்ற இரண்டு வாலிபர்கள் தாய்லாந்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கடந்த 24-ம் தேதி தெலுங்கானா மாநிலம் பத்ராதி கோதகுதேம் மாவட்டத்தில் உள்ள கோதகுதேம் நகரில் தங்கள் நண்பரின் பயிற்சி முகாமிற்கு வந்தனர்.

இந்நிலையில், இருவரும் பயிற்சி முகாமில் உள்ள பால்கனியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மின்சார கம்பி அறுந்து கிடந்தை பார்க்காமல் ஜான் அதனை தொட்டார். மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய ஜானை, அவரது நண்பர் சாலமன் காப்பாற்ற முயன்ற போது இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, வாலிபர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதிக அளவிலான தீக்காயங்கள் ஏற்பட்டதால் சாலமன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜானிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நண்பனை காப்பாற்ற முயன்ற கனடா வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 3 =

*