;
Athirady Tamil News

கொரகஹவேவ பிரதேசத்தில் கோர விபத்து- பெண் ஒருவர் பலி..!!

0

அனுராதபுரம் -புத்தளம் வீதி கொரகஹவேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதண்டு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மூதூர் பிரதேசத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி அனுராதபுர காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*