;
Athirady Tamil News

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜனார்த்தன் திரிவேதி நீக்கம்- ராகுல்காந்தி நடவடிக்கை..!!

0

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு அவர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை படிப்படியாக செய்து வருகிறார்.

குஜராத், ஒடிசா, மாநிலங்களுக்கான மேலிட பார்வையாளர்களாக ராஜீவ் சாதவ், ஜிதேந்திர சிங் ஆகியோரை நியமித்தார்.

தற்போது மூத்த காங்கிரஸ் தலைவரும், சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவருமான ஜனார்த்தன் திரிவேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் கடந்த 20 ஆண்டு காலமாக அந்த பொறுப்பில் இருந்து வந்தார். மேலும் காங்கிரசின் தகவல் தொடர்பு பிரிவிலும் பல ஆண்டுகள் இருந்து முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பு வகித்துள்ளார்.

சோனியாகாந்தி வெளிநாடு செல்லும்பட்சத்தில் அல்லது பிற அலுவல்களின் போது கட்சியை வழிநடத்திச் செல்லும் 4 பேர் குழுவிலும் ஜனார்த்தன் திரிவேதி இடம் பெற்று இருந்தார். இப்போது அவரை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி நீக்கி இருப்பது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல் குஜராத் மாநில மேலிட பொறுப்பாளராக இருக்கும் ராஜீவ் சாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் அசோக் கெலாட் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கூடிய நிலை இருந்தும் கடைசி நேரத்தில் நிலைமை மாறி வாய்ப்பை இழந்தது. இதற்கு பொறுப்பு ஏற்று ராஜீவ் சாதவ் நீக்கப்பட்டுள்ளார். இனி குஜராத்தில் கட்சியின் விவகாரங்களை அசோக் கெலாட் கவனிப்பார்.

மேலும் அவர் ஜனார்த்தன் திவேதிக்குப்பதில் புதிய பொது செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அசோக் கெலாட் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் மாநில தேர்தல் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் குஜராத் மாநில பொறுப்பும், பொது செயலாளர் பதவியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + nine =

*