;
Athirady Tamil News

பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்த இருவர் மின்சாரம் தாக்கி காயம்..!!

0

ஐம்மு-காஷ்மீர் மாநிலம் பாத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாபிர் அக்மத் பாபா மற்றும் ரஃபிக் அக்மத் தார் ஆகிய இருவர் பேருந்தின் உள்ளே இடம் இல்லாததால் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்தானது வாட்டர்கெயில் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது மின்சார கம்பியானது பேருந்தின் மேலே அமர்ந்திருந்தவர்கள் மீது பட்டது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மாவட்டத்தில் பேருந்து வசதி குறைவாக உள்ளதால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்கிறோம். தெருவில் உள்ள மரங்களில் சிக்கியுள்ள மின்சார கம்பிகளை சீரமைக்க தவறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கிராமத்தினர் புகார் அளித்துள்ளனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*