;
Athirady Tamil News

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயகௌரவத்தை இழந்தே ஈ.பி.டி.பியுடன் இணைந்துள்ளது – கருணா..!!

0

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தங்களது சுயகௌரவத்தினை இழந்தே ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆட்சியமைத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களது சுயகௌரவத்தினை இழந்து ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து யாழ்.மாவட்டத்தில் ஆட்சியமைத்துள்ளனர். ஆனால் கிழக்கு மாகாணத்தில் பல தமிழ் கட்சிகள் வெற்றிபெற்றுள்ள நிலையிலும் அவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு முன்வரவில்லை.

டக்ளஸ் தேவானந்தவை ஒட்டுக்குழுவென்றும், காட்டிக்கொடுத்தவர் என்றும், துரோகியென்றும் கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அவர்களுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது என்றால் ஏன் இங்குள்ளவர்களுடன் ஆட்சியமைக்கமுடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புத்திசாதுரியமாக செயற்படுமாகவிருந்தால் வடக்கு கிழக்கில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் தமிழர்களைக் கொண்டே ஆட்சியமைக்கும் நிலையை ஏற்படுத்த முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்களில் கரிசனை இருக்குமானால் சிறந்த முடிவினை அதன் தலைவர் எடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*