;
Athirady Tamil News

டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி 2 ஆவது நாளான இன்று (சனிக்கிழமை) தொழிலாளர்கள் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த தோட்டத்திலுள்ள தொழிலாளி ஒருவரை கடந்த மாதம் தோட்ட நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்தது. பின்னர் அவருக்கு தோட்ட அதிகாரி தொழில் தருவதாக கூறி ஏமாற்றியதன் காரணமாக ஏனைய தொழிலாளர்கள் அவருக்கு வேலையை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது தோட்ட அதிகாரியின் உருவ பொம்மையும் ஆர்பாட்டகார்களால் எரியூட்டப்பட்டது.

மேலும் நேற்று குறித்த தொழிலாளி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் ஏனைய தொழிலாளர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தை அறிந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நுவெரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மக்களை சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மக்கள் தெரிவித்ததாவது,

நாம் இவ்விடயம் தொடர்பில் தொழிற்சங்கத்திற்கும் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் அறிவித்துள்ளோமென தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த தொண்டமான், எனக்கு இவ்விடயம் தொடர்பில் பேச முடியாது. இ.தொ.கா தொழிற்சங்க அங்கத்தவர்களுக்கு மாத்திரம் பேசமுடியும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கிருந்த கண் பார்வையற்ற ஒருவர், ஐயா நீங்கள் அவ்வாறு கூற முடியாது எனத் தெரிவித்தப்போது தன்னை தரம்குறைவாக பேசியதுடன் தாக்கியதாக கூறி அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் கலந்துகொண்டு, மக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் பொழுது நாங்கள் கட்சி பார்த்து செயல்படுவதில்லை. எங்களுடைய மக்களை தாக்குபவர்களை தான் நாங்கள் தலைவர்களாக வைத்திருக்கின்றோம். எனவே இதனை மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

அத்தோடு குறித்த தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எதிர்வரும் திங்கட்கிழமை ஹற்றனிலுள்ள தொழில் திணைக்களத்தில் இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானத்தை பெற்றுக்கொடுப்போம்” எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 4 =

*