;
Athirady Tamil News

கோவா விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் கடத்தல் தங்கம் பிடிபட்டது – இருவர் கைது..!!

0

குளுகுளு சொகுசு நகரமான கோவா தலைநகரான பனாஜியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் மர்மகோவாவுக்கு உட்பட்ட பகுதியில் டபோலின் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது

இந்நிலையில், டபோலிம் சர்வதேச விமான நிலைத்தில் இன்று அதிகாலை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதித்தனர்.

அப்போது, சார்ஜாவில் இருந்து வந்த ஒரு பயணி தனது ஆடைக்குள் இடுப்பை சுற்றி 3229 கிலோ கிராம் எடையுள்ள 4 தங்கக் கட்டிகளை பதுக்கி கடத்திவந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்நபரை கைதுசெய்து விசாரித்தபோது, இந்த தங்கம் என்னுடையது அல்ல. என்னுடன் இதே விமானத்தில் பயணம் செய்த ஒருவர் இதை பத்திரமாக விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து ஒப்படைக்குமாறு கேட்டு கொண்டதால் இந்த தவறை செய்து விட்டேன் என அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, விமான நிலய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். சுங்கத்துறையினரின் சோதனை முடிந்து வெளியேற தயாரான கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருநபரை அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இன்று கைப்பற்றப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் ஒருகோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews #seizesgold

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*