;
Athirady Tamil News

காஷ்மீரில் பாதுகாப்புப் படை ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…!!

0

ஜம்மு – காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள நவுலா போஷ்வாரி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சில பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாததால் பயங்கரவாதிகள் இருட்டில் தப்பியோடி மறைந்து விட்டனர். இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + three =

*