;
Athirady Tamil News

இணைந்து ஆட்சி அமைப்­பதை விட எதிர்­க்கட்­சி­யாக இருப்­போம்- சிறித­ரன் எம்.பி..!!

0

துரோ­கி­க­ளு­டன் கூட்­டுச் சேர நாம் தயா­ரில்லை. கரைச்சி மற்­றும் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்­காக ஈ.பி.டி.பியி­டமோ, அவ­ரது அடி­வ­ருடி சந்­தி­ர­கு­மா­ரின் சுயேச்­சை­ யி­டமோ மண்­டி­யி­ட­மாட்­டேன். அவர்­கள் ஆத­ர­வில் ஆட்சி அமைப்­ப­தி­லும் பார்க்க எதிர்­க்கட்­சி­யாக இருந்­து­விட்­டுப்­போ­வோம். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் ஆட்­சியை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ஈ.பி.டி.பியு­டன் இணைந்து கைப்­பற்றி ஆட்சி அமைத்து வரு­கின்­றது. இந்த நிலை­யி­லேயே, கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.
இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நீண்ட பெரும் விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் தமிழ் மக்­கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட இன அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ரா­க­வும் தம் இனத்­தின் இருப்­பைத் தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்­கா­க­வும் தமி­ழர்­கள் சிந்­திய இரத்­த­மும், வியர்­வை­யும், இன்­ற­ள­வும் தமி­ழர்­கள் சுமக்­கும் வலி­க­ளும் எண்­ணி­ல­டங்­கா­தவை.

இருள் பொதிந்த இறு­திப் போருக்­குள் அகப்­பட்­டுக் கொண்ட நான்கு லட்­சத்­துக்கு மேற்­பட்ட மக்­கள் உண்ண உண­வின்றி, உடுக்­கத் துணி­யின்றி, இயற்­கைக் கடன் தீர்க்­கக்­கூட இட­மில்­லா­மல் அலைந்­த­போது, வன்னி மண்­ணில் வெறும் 75 ஆயி­ரம் பேர்­தான் உள்­ள­னர் என்ற அரசு உணவு கூட அனுப்­பா­மல் குழந்­தை­க­ளை­யும், வயோ­தி­பர்­க­ளை­யும், காயப்­பட்­ட­வர்­க­ளை­யும், கர்ப்­ப­வ­தி­க­ளை­யும் பட்­டி­னி­போட்டு, பாது­காப்­பு­வ­ல­யம் என்று அறி­வித்த பகு­திக்­குள்­ளேயே பொஸ்­ப­ரஸ் குண்­டு­க­ளை­யும், கொத்­த­ணிக் குண்­டு­க­ளை­யும் வீசி எம்­மக்­க­ளைக் கொத்­துக் கொத்­தாக கொன்­றொ­ழித்த போது அர­சோடு துணை இரா­ணு­வ­மா­கச் செயற்­பட்ட ஈ.பி.டி.பியி­ட­மும், சந்­தி­ர­கு­மா­ரி­ட­மும் ஆத­ர­வுக்­க­ரம் நீட்டி ஆட்சி அமைக்­கும் இழி செயலை கிளி­நொச்சி மாவட்ட மக்­க­ளா­கிய நாம் ஒரு­போ­தும் செய்­து­வி­ட­மாட்­டோம்.

தமி­ழர்­கள் பல தசாப்த காலங்­க­ளாக இரத்­த­மும், கண்­ணீ­ரும், வியர்­வை­யும் சிந்தி வளர்த்­தெ­டுத்த விடு­த­லைப்­ப­யிரை வேரோடு பிடுங்­கி­யெ­றிந்­து­விட்டு, தமிழ் இனத்­தி­னது இருப்­பையே சிதைத்து சின்­னா­பின்­ன­மாக்­கிய சிங்­கள அர­சோடு சேர்ந்து வெற்­றி­வி­ழாக கொண்­டா­டி­யும், 2011இல் ஐக்­கி­ய­நா­டு­கள் மனி­த­உ­ரி­மை­கள் சபை­யில் இன அழிப்­புக்­கான போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு அத்­தி­வா­ர­மி­டப்­பட்­ட­போது, டக்­ளஸ் தேவா­னந்தா ஜெனி­வா­வின் முன்­ற­லி­லும், சந்­தி­ர­கு­மார் கிளி­நொச்சி நக­ரத்­தி­லும், ‘இறு­திப் போரில் இறந்­த­வர்­கள் அனை­வ­ரும் புலி­க­ளே­யன்றி பொது­மக்­க­ளல்ல’ என்று அப்­போ­தைய அர­சுக்கு ஒப்­புக்­கொ­டுத்­ததை போரின் வலி­க­ளைச் சுமந்து நிற்­கும் தமிழ் மக்­கள் ஒரு­போ­தும் மறந்­து­வி­டப்­போ­வ­தில்லை.

2006ஆம் ஆண்­டி­லி­ருந்து இறு­தி­வரை யாழ்ப்­பாண மண்­ணில் 3 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்டு செம்­ம­ணி­யில் புதைக்­கப்­பட்­ட­தற்­கும், 1990ஆம் ஆண்­டு­க­ளில் மண்­டை­தீவு, ல்லைப்­பிட்டி, மண்­கும்­பான் பகு­தி­க­ளில் கொப்­பே­க­டு­வ­வால் அழைத்­து­வ­ரப்­பட்ட 160க்கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் மண்­டை­தீவு தோமை­யார் ஆலய முன்­றல் கிணற்­றி­லும், செம்­பாட்­டுத்­தோட்­டக் கிணற்­றி­லும் தூக்­கி­வீ­சப்­பட்­ட­போது அல்­லைப்­பிட்­டி­யில் வைத்து உங்­கள் பிள்­ளை­க­ளுக்கு நான் பாது­காப்பு அளிக்­கி­றேன் எனக் கூறி, அந்­தப் படு­கொ­லை­க­ளுக்கு கார­ண­மான டக்­ளஸ் தேவா­னந்­தா­வும், அவ­ரது அடி­வ­ருடி சந்­தி­ர­கு­மா­ரும் எப்­படி எம்­மோடு சம­பங்­கா­ளி­க­ளா­கி­விட முடி­யும்?

கரைச்சி பிர­தேச சபை­யி­லும், பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­யி­லும் எமக்கு கிடைத்த பெரும்­பான்­மை­யின் அடிப்­ப­டை­யில் தலா ஒவ்­வொரு ஆச­னப் பற்­றாக்­குறை உண்டு என்­பது உண்­மையே. ஆட்சி அமைப்­ப­தற்­காக இணைந்து செயற்­ப­டு­மாறு நாம் ஒரு­போ­தும் அவர்­களை கோர­வு­மில்லை. இனி எப்­போ­தும் அவ்­வாறு கோரப்­போ­வ­து­மில்லை. மாறாக இந்த இரண்டு சபை­க­ளி­லும் எமது கட்சி தவிர்ந்த ஏனை­ய­வர்­கள் எல்­லோ­ரும் இணைந்து ஆட்சி அமைத்­தால், நாங்­கள் ஜன­நா­யக பண்­பு­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆரோக்­கி­ய­முள்ள எதிர்க்­கட்­சி­யாக எமது பணியை எம்­மக்­க­ளுக்கு ஆற்­று­வோம். தேர்­தல்­க­ளில் வெற்றி, தோல்வி என்­பது இயல்­பா­னதே!

இவ்­விரு சம்­ப­வங்­க­ளும் நடக்­கின்­ற­போது மக்­க­ளும், நாங்­க­ளும் விட்ட தவ­று­க­ளைத் திருத்­திக் கொள்­கி­றோம். அதற்­கான கால மௌனிப்­பாக இன்­னும் நான்கு ஆண்­டு­கள் காத்­தி­ருக்க வேண்­டு­மா­னால் அதற்­கும் நாம் தைரி­ய­மான எண்­ணத்­தோடு தயா­ராக இருக்­கி­றோம்.

கொள்­கைக்­காக குப்பி கடித்து உயிர் மாய்த்த மாவீ­ரர்­க­ளின் கந்­தக மண்­ணிலே, எதி­ரி­களை விட­து­ரோ­கி­களே மன்­னிக்­கப்­ப­ட­மு­டி­யா­த­வர்­கள். அத்­த­கைய துரோ­க­மி­ழைத்து, எம் இனத்தை அழித்­த­வர்­க­ளு­டன் அணி­சேர நாம் ஒரு­போ­தும் தயா­ரில்லை. நாங்­கள் எடுக்­கும் முடிவு சரியா, பிழையா என்­பதை வர­லா­றும், எம் தமிழ் மக்­க­ளும் தீர்­மா­னிக்­கட்­டும். என்­றுள்­ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − seven =

*