;
Athirady Tamil News

மாணவர்களுக்கு தான் முதலில் போராட்ட உணர்வு வருகிறது – கமல்ஹாசன் பேட்டி

0

நடிகர் கமல்ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களுக்கு தான் தற்போது முதலில் போராட்ட உணர்வு வருகிறது. இது ஒரு நல்ல மாற்றம். காவிரிக்காக போராட ஆரம்பித்ததை போல் அரசியலிலும் இதே மாற்றத்தை மாணவர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட இன்று நான் தூத்துக்குடிக்கு செல்கிறேன். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு இன்று அழுத்தம் கொடுக்க வேண்டிய நாள். அதனால் மக்களுடன் சென்று போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இது முக்கியமான கட்டம்

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மக்கள் நீதி மய்யம் களம் இறங்கி போராடுமா?

பதில்:- தேவைப்பட்டால் களம் இறங்குவோம். இப்போது நாம் குரல் கொடுக்க வேண்டிய, அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது.

கே:- நடிகர் சங்கமும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக கூறி இருக்கிறார்கள். நீங்கள் காவிரி பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடத்துவீர்களா?

ப :- கண்டிப்பாக 4-ந்தேதி அதுபற்றி திருச்சியில் பேசப் போகிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*