;
Athirady Tamil News

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலை மீள மிதக்க வைத்தது இலங்கைக் கடற்படை..!!

0

இரண்டாம் உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட பிரிட்டனின் பயணிகள் கப்பல் ஒன்றை மீண்டும் மிதக்க வைத்துள்ளது இலங்கை கடற்படை.

இந்த கப்பல் 1942ஆத் ஆண்டு ஜப்பான் வான் வழித் தாக்குதலில் இலங்கை கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையின் உதவியுடன் 75 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்தக் கப்பல் மிதக்க வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்துக்கு அண்மையாக கடலுக்குள் 36 அடி (10.7 மீற்றர்) ஆழத்தில் மூழ்கியிருந்தது.
452 அடி நீளமான இந்தக் கப்பலின் சீரமைப்புப் பணிகள்

2017 செப்ரெம்பர் மாதம் ஆரம்பமாகின. கிழக்கு கடற்படைத் தலைமையகம் சீரமைப்புப் பணிகளை முன்னெடுத்தது.

பழமையான பல கப்பல்களின் பாகங்களைக் கொண்டு இந்தக் கப்பல் சீரமைக்கப்பட்டது என கடற்படை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + six =

*