;
Athirady Tamil News

தலைவர் தெரிவு நடைபெறாத நிலையில் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன்?..!!

0

வலி.வடக்கு பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு நடைபெறாத நிலையில் அந்தச் சபைக்குத் தரிவாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின உறுப்பினர் சோ.சுகிர்தன், பிரதேச சபைத் தலைவர் என விழித்துக் கூறப்பட்டு நிகழ்வொன்றில் கலந்து
கொள்கின்றார்.

நல்லூர் பிரதேச சபை உறுப்பினராக கு.மதுசூதனன் தெரிவாகியமைக்கு பாராட்டு தெரிவித்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவில் சிவநேசன் திறந்த அரங்கில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

அந்த நிகழ்வில் விழா நாயகனுக்கு வாழ்த்துரைப்பவர்கள் என பெயரிடப்பட்டு உள்ள
இடத்தில் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் என பெயரிடப்பட்டு உள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பெருப்பாலான சபைகளில் எந்தவொரு கட்சியும் பெரும்பாண்மை பெறாத நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர் தெரிவு தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் வலி.வடக்கு பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு இடம்பெறாத நிலையில் இன்றைய நிகழ்வில்
சோ.சுகிர்தன் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் என அழைக்கப்பட்டுள்ளார்.

வலி. வடக்கு பிரதேச சபையில் தமிழரசு கட்சி 17 ஆசனங்களை பெற்றுள்ள போதிலும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 8 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திர கட்சி 4 ஆசனங்களையும் தமிழர் விடுதலை கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய தலா 2 ஆசனங்களையும் ,
பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − two =

*