;
Athirady Tamil News

நடுவானில் ஏற்பட்ட கோளாறு: 5 மணி நேரம் 220 பயணிகளுடன் வானில் வட்டமடித்த விமானம்..!!

0

கடந்த வெள்ளியன்று நியூயார்க் நோக்கி பறந்த சுவிஸ் சர்வதேச விமானம் நடுவானில் தொழில்நுட்ப பழுதடைந்ததால் சுமார் 5 மணி நேரம் வானில் வட்டமிட்டு பறந்த பின்ன்னர் அவசர அவசரமாக தரையிரக்கப்பட்டது.

ஏர் பஸ் ஏ 330 எனும் சுவிஸ் நாட்டிற்கு சொந்தமான சர்வதேச விமானத்தின் இடது பக்க இயந்திரம் நடுவானில் தொழில்நுட்ப பழுது அடைந்தது.

எனவே உடனடியாக விமானிகள் விமானத்தை தரையிறக்க தீர்மானித்தபோது விமானத்தில் எரிபொருள் முழு கொள்ளவை கொண்டிருந்ததால் நேரடியாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஏனெனில் பழுது நேரத்தில் எரிபொருள் முழுமையாக இருக்கும் பகுதில் அதிகமாக காற்று வீசக்கூடாது என்பதால் தரையிறங்குவதற்கு முன்பாக எரிபொருளை நடுவானிலேயே முழுதும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை விமானிக்கு ஏற்பட்டது.

எனவே சுமார் 9 மணியளவில் சுவிஸிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் பின்னர் 2 மணி அளவில் சூரிச் விமான நிலையத்தின் சிறப்பு அனுமதியை பெற்று தரையிறக்கப்பட்டது.

இதனால் 11 மணி முதல் 6 மணி வரை எந்த விமானமும் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கவோ அல்லது புறப்பட்டு செல்லவோ​​அனுமதிக்கப்படவில்லை.

இறுதியில் விமானத்தில் பயணம் செய்த 220 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்காலிகமாக தங்குவதற்கு ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 1 =

*