;
Athirady Tamil News

காணாமல் போன நடிகையின் உடல் காட்டுக்குள் கண்டுபிடிப்பு..!!

0

அமெரிக்காவின் பிரபல நடிகை Adea Shabani கடந்த மாதம் கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், இவரது குடியிருப்பில் இருந்து சுமார் 654 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டிற்குள் இறந்து கிடந்த நிலையில் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவரது, உடலில் இருந்த டாட்டூவை வைத்து, இவர்தான் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவரது இறப்பில், காதலர் Christopher Spotz-க்கு தொடர்பு இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர், Spotz-க்கு மற்றொரு காதலி இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட பிரச்சனையால், Adea Shabani கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து விசாரித்து வருகிறோம், இவரது மரணத்திற்கான முழுத்தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*