;
Athirady Tamil News

வவுனியா வடக்கில் தென்னிலங்கை கட்சிகள் ஆட்சி அமைப்பதை தடுக்க கூட்டமைப்புக்கு முன்னனி ஆதரவு..!!

0

வவுனியா வடக்கில் தென்னிலங்கை கட்சிகள் ஆட்சி அமைப்பதை தடுக்க கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு

வவுனியா வடக்கு பிரதேச சபையில் தென்னிலங்கை கட்சிகள் ஆட்சி அமைப்பதை தடுக்க தமிழ் தேசிய மக்கள் முன்னனி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு மொத்தம் 26 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, தமிழர் விடுதலைக் கூட்டனி ஆகிய தமிழ் கட்சிகள் 14 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஜேவிபி உள்ளிட்ட தென்னிலங்கை கட்சிகள் 12 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர். தமிழ் கட்சிகளில் இலங்கை தமிழரசு கட்சி 8 ஆசனங்களையும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி 3 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டனி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், தென்னிலங்கை கட்சிகள் சார்பில் தெரிவாகிய சிங்கள உறுப்பினர்கள் 12 பேரும் வேறுவேறு கட்சியினராகினும் மகிந்த சார்பான கட்சியின் தலைமையில் வவுனியா வடக்கு பிரதேச சபையைக் கைப்பற்ற தயாராகி வருகின்றனர். இதனால் தமிழர் தரப்பின் 3 கட்சிகளும் இணைந்தால் மாத்திரமே வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்ற முடியும். ஏதாவது 2 தமிழ் கட்சிகள் இணைந்தால் கூட ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆபத்தை உணர்ந்து வவுனியா வடக்கில் தென்னிலங்கை கட்சிகள் ஆட்சி அமைப்பதை தடுக்கும் பொருட்டும், தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கும் பொருட்டும் அங்கு முன்னிலை பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டனி இது தொடர்பில் இன்னும் தனது உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அவர்களும் ஆதரவு வழங்கினால் மட்டுமே கூட்டமைப்பு ஆட்சி அமைக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − sixteen =

*