;
Athirady Tamil News

பீகாரில் வகுப்பு கலவரம் – மத்திய மந்திரியின் மகன் கைது..!!

0

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி அஸ்வினிகுமார் சவுபேயின் மகன் அர்ஜித் சஷ்வத் தலைமையில் கடந்த 17-ந்தேதி பாகல்பூரில் ராம நவமி ஊர்வலம் நடந்தது. போலீஸ் அனுமதி பெறாமல் நடந்த ஊர்வலத்தின் போது சில இடங்களில் வகுப்பு கலவரம் ஏற்பட்டது.

இது தொடர்பாக பாகல் பூர் போலீசார் விசாரணை நடத்தி அர்ஜித் சஷ்வத் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் பாகல்பூர் கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை கோர்ட்டு நிராகரித்து கடந்த 24-ந்தேதி கைது வாரண்டு பிறப்பித்தது.

இந்த நிலையில் இந்த வகுப்பு கலவரம் தொடர்பாக அர்ஜித் சஷ்வத்தை போலீசார் இன்று கைது செய்தனர். பாட்னாவில் உள்ள அனுமான் கோவிலில் இருந்த போது போலீசார் அவரை கைது செய்தனர். பாட்னாவில் இருந்து அவர் பாகல்பூர் கொண்டு செல்லப் படுகிறார். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*