;
Athirady Tamil News

பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியது – டீசல் விலையும் கிடுகிடு உயர்வு..!!

0

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

அன்றிலிருந்து தினந்தோறும் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டேதான் செல்கின்றது. நாளொரு உயர்வும், பொழுதொரு அதிகரிப்புமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களை வைத்துள்ள நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடும் சரிவை சந்தித்துள்ள வேளையில் இந்தியாவில் இன்று பெட்ரோல் விலை நான்காண்டுகள் காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், டெல்லி நிலவரப்படி இன்றைய பெட்ரோலின் விலை 18 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.73.73 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டீசல் விலையும் 18 காசுகள் உயர்ந்து ரூ.64.58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − two =

*