;
Athirady Tamil News

கண்டியில் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்..!!

0

குருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்காககச் சென்ற 4 முஸ்லிம் மாணவர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தினர் என்று கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருநாகல் தெலியாகொன்ன மற்றும் பறகஹதெனியவில் இருந்து பிரத்தியோக வகுப்புகளுக்காக 13 முஸ்லிம் மாணவர்கள் கண்டிக்குச் சென்றுள்ளனர்.

இந்தப் பேருந்தில் இரு முஸ்லிம் மாணவிகளும் இருந்துள்ளனர். இதன் போது மதுபோதையில் பேருந்தில் பயணித்த 4 பேர் முஸ்லிம் மாணவிகளை சீண்டிக் கொண்டிருக்கவே அங்கிருந்த முஸ்லிம் மாணவர்கள் அவர்களைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன் பின்னணியில் கண்டி வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் இந்த மாணவர்கள் இறங்கும் போது குறித்த நபர்கள் இறங்கி தெருவில் இருந்த இரும்பு கம்பியைக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*