;
Athirady Tamil News

சுற்றுலாப்பயணிகளுக்கு மனைவிகளை விருந்தாக்கும் ஆண்கள்: அதிரவைக்கும் காரணம்..!!

0

கென்யாவில் தலைவிரித்தாடும் வறுமை மற்றும் கணிக்க இயலாத சுற்றுலா வருவாய் என தத்தளிக்கும் மக்கள் தங்கள் மனைவிகளை சுற்றுலாப்பயணிகளுக்கு விருந்தாக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கென்யாவில் தலைவிரித்தாடும் வறுமையால் பல குடும்பங்கள் சுற்றுலாப்பயணிகளை நம்பியே பிழைப்பை நடந்துகின்றனர்.

இதில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர். கணிக்க முடியாத சுற்றுலா வருவாயால் பாலியல் தொழிலே தங்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

கென்யாவின் குவேல் கவுண்டி பகுதியில் குடியிருக்கும் ரமடான் என்ற நபர் 2006 ஆம் ஆண்டு ஜேர்மன் சுற்றுலாப்பயணிக்கு தமது மனைவியை தனது தங்கை என அறிமுகப்படுத்தி பாலியல் தொழிக்கு அனுப்பி வைத்துள்ளார்.முதலில் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த அவரது மனைவி, வறுமை காரணமாக இறுதியில் பாலியல் தொழிலுக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது மூன்று வேளையும் உணவருந்த முடிகிறது, தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடிகிறது எனக் கூறும் ரமடான் குடும்பம், பாலியல் தொழில் தங்களின் வாழ்வாதாரத்தை மாற்றியதாகவும் கூறுகின்றனர்.

கென்யாவின் கடற்கரை கிராமங்களில் இதுபோன்ற கதைகள் புதிதல்ல என்ற போதும், பெரும் செல்வந்தர்களான சுற்றுலாப்பயணிகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மட்டுமே கென்யர்கள் தங்கள் மனைவிகளை விருந்தாக்குகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் கென்யா, கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது.

இதனால் அரசுக்கு சுமார் 100 மில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் கொடிகட்டும் பாலியல் தொழிலால் கென்யாவில் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களும் அதிகரித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் கென்யாவில் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை சுமார் 5,335 என பதிவானது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு வெறும் 325 என இருந்தது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*