;
Athirady Tamil News

பசியால் துடித்த பிள்ளைகள்… கத்திரிக்காய் திருடிய நபர்: 9 ஆண்டுகளுக்கு பின்னர் விடுவித்த நீதிமன்றம்..!!

0

இத்தாலியில் வறுமை காரணமாக தனியார் தோட்டத்தில் இருந்து கத்திரிக்காய் திருடிய நபரை 9 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.குறித்த

வழக்கு விசாரணைக்காக மட்டும் பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசுக்கு இதுவரை 8,000 யூரோ செலவானது எனவும் கூறப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இத்தாலியின் Lecce பகுதியில் அமைந்துள்ள தனியார் கத்திரிக்காய் தோட்டத்தில் இருந்து ஒரு சில காய்களை பறித்துள்ளார்.

தனது பிள்ளைகளின் பசி கண்டு பொறுக்க முடியாமலே தாம் திருடியதாகவும் கைதுக்கு பின்னர் பொலிசாரிடம் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அவருக்கு நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனையும் 500 யூரோ அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

பின்னர் மேல்முறையீடு காரணமாக 4 மாத சிறை தண்டனையும் 120 யூரோ அபராதமும் என விதிக்கப்பட்டது.

ஆனால் அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி குறித்த நபரின் வழக்கறிஞர்கள் இத்தாலியின் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வறுமை நிலையை கருத்தில் கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பியது.

மட்டுமின்றி, குறித்த நபர் காய்களை திருடி பெருந்தொகைக்கு விற்பனை செய்யவில்லை. தமது இயலாமையால் பிள்ளைகள் பசியால் துடிப்பதை பொறுக்க முடியாமல் திருடியுள்ளார்.

இது எந்த வகையில் குற்றமாகும் எனவும் உச்ச நீதிமன்றம் எதிர் தரப்பினரிடம் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து குறித்த வழக்கை தள்ளுபடி செய்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது

9 ஆண்டுகள் நீண்ட இந்த வழக்கால் அரசுக்கு பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து சுமார் 8,000 யூரோ வரை செலவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 2 =

*