;
Athirady Tamil News

தம்பியின் குழந்தைக்கு அம்மாவான அக்கா: 5 ஆண்டுகள் சிறை?..!!

0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனது தம்பியுடன் ஏற்பட்ட தவறான உறவால் குழந்தை பெற்றுக்கொண்ட சகோதரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

auline Martin(33) என்ற பெண்மணி தனது சகோதரனுடன் கடந்த 5 வருடங்களாக உறவில் ஈடுபட்டுள்ளார்.இதன் காரணமாக கருவுற்ற இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கு குழந்தையின் பிறப்பு பதிவேட்டில், குழந்தையின் தந்தை பெயரை இவர் குறிப்பிட மறுத்துள்ளார்.

இந்நிலையில், மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், உணவகம் ஒன்றில் இவர் பணியாற்றியபோது, இவரது உண்மை விவரங்கள் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவரை பொலிசார் கைது செய்து விசாரித்ததில், நடந்தவற்றை ஒப்புக்கொண்ட இவர், இவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தற்போது ஒன்றாக இல்லை என்று கூறியுள்ளார்.

தற்போது, இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளார். இவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், இவரது சகோதரனையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*