;
Athirady Tamil News

சொந்த மகனை சங்கிலியால் பிணைத்து துன்புறுத்திய தாயார்: அதிர்ச்சி காரணம்..!!

0

சீனாவின் ஹெனான் நகரில் காது கேளாத ஊமை மகனை தாயாரே சங்கிலியால் பிணைத்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாழடைந்த கட்டிடத்தின் உள்ளே சொந்த மகனை கடந்த 10 ஆண்டுகளாக குறித்த தாயார் சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

தற்போது 41 வயதாகும் Wang Zhiqiang பிறக்கும்போதே ஊமையாகவும் காது கேளாதவராகவும் இருந்துள்ளார்.

இருப்பினும் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததை அடுத்து சிறப்பு சிறார்களுக்கான பாடசாலையில் சேர்ப்பித்துள்ளனர்

ஆனால் பாடசாலையில் கடுமையான கிண்டலுக்கு உள்ளான Wang Zhiqiang அதன் பின்னர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

ஏழ்மையில் தவித்து வந்த குடும்பத்திற்கு சிறுவன் Wang Zhiqiang-ஐ உரிய மருத்துவர்களிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியாமல் போனது.

மட்டுமின்றி நாளுக்கு நாள் சிறுவனின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டு அதுவே குடும்பத்தாருக்கு தொல்லை அளிக்கும் வகையில் மாறியுள்ளது

இதனையடுத்தே கடந்த 10 ஆண்டுகளாக Wang Zhiqiang சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.தமக்கு இதைதவிர வேறு வழி இல்லை எனவும் அதனாலையே தமது மகனை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதாகவும் Wang Zhiqiang-ன் தாயார் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 20 =

*