;
Athirady Tamil News

ஜேர்மனியில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு..!!

0

ஜேர்மனியில் 43 வருடத்தில் இல்லாத வகையில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1973 ஆண்டிலிருந்து பார்க்கும்போது 2016 ஆம் ஆண்டே ஜேர்மனி, அதன் அதிகபட்ச குழந்தை பிறப்பு விகிதத்தை எட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 30லிருந்து 37 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2016ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரையில் குழந்தை பிறப்பு விகிதம் 1.6 சதவிகிதமாக இருக்கும்போது, ஜேர்மனியில் 1.5 ஆக உள்ளது.

பிரான்சில் 1.92 வும், ஸ்பெயின் மற்றும் இத்தாலி குறைந்தபட்சமாக 1.34 என்ற அளவிலும் உள்ளது.

ஜேர்மன் தாய்மார்களை விட, துருக்கி நாட்டவர்கள் 21,000 குழந்தைகளும், சிரியாவை சேர்ந்தவர்கள் 18,000 குழந்தைகளும் பெற்றெடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளிலேயே மக்கள் தொகையில் முன்னணியில் உள்ள ஜேர்மனியில், கடந்த 1970ம் ஆண்டிலிருந்தே பிறப்பு விகிதம் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 20 =

*