;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் ஒருவர் பலி..!!

0

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த இரும்பினாலான கேட் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டுவ – பன்னல வீதியின் கெரன்வத்த பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் கெரன்வத்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கயான் சமரக்கொடி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*